வடக்கு பாடசாலைகளின் நிலை குறித்து அதிருப்தியை வெளியிட்ட அமைச்சர் விஜயகலா..!!

வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு சரியான முறையில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழு பிரதமர் ரணில் தலைமையில் இன்று கூடி கலந்துரையாடலில் ஈடுபட்டது.

இதில் அமைச்சர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.இதன் போது கருத்து வெளியிட்டிருந்த கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ‘வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு சரியான முறையில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை என கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.பல பாடசாலைகளில் போதிய கட்டடங்கள் இல்லை. கட்டடங்கள் இருக்கும் பாடசாலைகளில் தளபாடங்கள் இருப்பதில்லை. சில பாடசாலைகளில் போதிய மலசலகூட வசதிகள் இல்லை.

குடிப்பதற்கு குடிநீர் வசதி இல்லை. சில பாடசாலைகளுக்கு போதிய கணனி வசதி இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.யுத்த காலத்தின் போது வடமாகாணம் கல்வியில் உயர்ந்த நிலையில் இருந்தது. எனினும், தற்போது அந்த நிலை மாறிவிட்டது’ என கூறினார்.இதன்போது பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

‘வடக்கின் பாடசாலைகளில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யவே விஜயகலா மகேஸ்வரனை கல்வி இராஜாங்க அமைச்சராக நியமித்ததாக கூறியிருந்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *