யாழ் தீவகத்தில் பிறந்த நோர்வே “பாரத்” நீர்கொழும்பு பகுதியில் சித்தரவதை செய்து வெட்டிக் கொலை

நோர்வேயில் வாழ்ந்து வாந்த யாழ்பாணம் தீவகத்தை பூர்வீகமாக கொண்ட கராட்டி மற்றும் பிரபல குத்துச்சண்டை “பாரத்” என்று பரவலாக அறியபட்டவர் மர்மமான முறையில் நீர்கொழும்பு பகுதியில் சித்தரவதை செய்து வெட்டிக் கொல்லபட்டுள்ளார்.

நோர்வேயில் இருந்து அடிக்கடி இலங்கை சென்று வந்த “பாரத்” கடந்த 6 மாதகாலத்தில் இரண்டு தடவை கொழும்பு செண்றிருந்தார்.

சிலருடைய உள்வாங்கி கொல்லும் சதி சந்திரத்தில் அல்லது அதனை ஒத்த சில திட்டமிட்ட சதியில் “பாரத்” அகபட்டிருக்கலாம் என்று கருதபடுகிறது.

பாரத்தின் உடலில் சந்தேகத்திற்கு இடமான காயங்கள் இருப்பதாக தெரிய வருகிறது.

Oslo 20170711. Illustrasjonsbilde av norsk pass. Foto: Jon Olav Nesvold / NTB scanpix

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் தனிமையில் வாழ்ந்து வந்த “பாரத்” இலங்கை செல்ல முதல் நோர்வே சேதுவை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிய வருகிறது.

நோர்வேயில் பிரபல தற்காப்பு வீரனாக தமிழர் மத்தியில் நோர்வே கடவுச்சீட்டுடன் வலம் வந்த “பாரத்” பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் சிறை சென்று வந்தவர்.

Update – ….

இலங்கையைச் சுற்றிப் பார்ப்பதற்காக நோர்வேயில் இருந்து வந்த 53 வயதான வேலுப்பிள்ளை கஜேந்திரன் என்பவரே இவ்வாறு கொல்லபட்டுள்ளார். அவர் நீர் கொழும்பில் சுற்றுலா விடுதியில் அறை ஒன்றை பெற்று தங்கியிருந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 10ஆம் திகதி ஹோட்டலில் இருந்து வெளியே சென்ற போதிலும் திரும்பி வரவில்லை என்று போலியான தகவலை கொட்டல் நிர்வாகம் தெரிவித்து குறித்த நபர் தங்கியிருந்த அறையின் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவரது சடலம் விழுந்து கிடந்துள்ளது.

குறித்த நபரின் உடலின் பல பகுதிகளில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளன. கஜேந்திரன் மோசமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீர்கொழும்பு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வேலுப்பிள்ளை கஜேந்திரன் இலங்கையை பூர்வீகமாக கொண்டுள்ள நிலையில்இ நோர்வேயில் பிரஜாவுரிமை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *