யாழில் அடித்துக்கொலை செய்யப்பட்ட பெண்! சகோதரர்கள் கைது

உரும்பிராய் பகுதியில் பெண் ஒருவரை அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட இரு பிரதான சூத்திரதாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களான சகோதரர்கள் இருவரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு இளைஞரை தேடி வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரவிச்சந்திரன் சதீஸ் மற்றும் ரவிச்சந்திரன் நிசாந்தன் என்ற சகோரர்கள் இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உரும்பிராய் பகுதியில் வயதான பெண் ஒருவர் கோடாரியால் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பிரதான சந்தேக நபர்களான மூவரை பொலிஸார் தேடி வந்தனர்.

பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது, பிரதான சூத்திரதாரிகளான குறித்த இருவரும் யாழ்ப்பாணம் நகரப் பகுதிக்குள் நடமாடுவதாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் குறித்த இருவரும் யாழ்.திருநெல்வேலி சிவன் அம்மன் வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *