யாழில் முதியவருக்கு எமனாக மாறிய சுருட்டு!

சுருட்டுக்கு மூட்டிய தீக்குச்சி சாரத்தில் வீழ்ந்து தீப்பற்றியதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உறவினர்களால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முதியவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் கல்லூரி வீதி பருத்தித்துறையைச் சேர்ந்த 85 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி தனது வீட்டில் சுருட்டு புகைப்பதற்காக தீக்குச்சி தவறுதலாக அணிந்து இருந்த சாரத்தின் மீது போட்டு உள்ளார். அதனால் உடலில் பரவலாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

அவர் மந்திகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சிகிச்சை பயனின்றி அவர் நேற்றுமுன்தினம் அவர் உயிரிழந்தார்.

இறப்புத் தொடர்பான விசாரணை யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *