முகமாலையிலுள்ள கண்ணிவெடிகள் அகற்றும் பகுதிக்கு நோர்வே தூதுவர் விஜயம்

முகமாலைப் பகுதியில் காணப்படும் கண்ணிவெடிகளை 3 ஆண்டு காலப்பகுதிக்குள் அகற்றி முடிப்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேரியன் ஹேகன் தெரிவித்துள்ளார். நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் அடங்கிய குழுவினர் இன்று (புதன்கிழமை) கிளிநொச்சி, முகமாலைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த குழுவினர் இன்று முற்பகல் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்டிருந்ததுடன், நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் குறித்த விஜயம் அமைந்துள்ளது.

குறித்த விஜயத்தின்போது ஊடகங்களிற்கு நோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேரியன் ஹேகன் கருத்துத் தெரிவித்தபோது, இப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக நோர்வே அரசாங்கம் இலங்கைக்கு 3 ஆண்டுகளிற்கு உதவ உள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் பிரதமரிற்கு நோர்வே அரசு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் குறுகிய காலப்பகுதிக்குள் கண்ணிவெடியகற்றி முடிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், மிகவும் பயங்கரமான வெடிபொருட்கள் அப்பகுதியில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *