செத்தவன் ஒன்றும் உத்தமன் இல்லை- றெஜியின் தம்பி

நண்பனின் மனைவியோடு கட்டிலில் உல்லாசமாக இருந்துவிட்டு. அதனை வீடியோ எடுத்து கட்டாரில் உள்ள புருஷனுக்கே அனுப்பிய ஆசாமி தான் இந்த பிரேம ரமணன். இவர் வேறு யாருமே இல்லை. TRO முன்னாள் பணிப்பாளர் றெயின் தம்பி தான். TRO (தமிழர் புணர்வாழ்வுக் கழகம்) விடுதலைப் புலிகள் பலமாக இயங்கி வந்த காலத்தில், தமிழ் மக்களுக்கு உதவ என ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம். சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், லண்டனில் உள்ள றெயியை நல்லவர் என்று நம்பி, இதன் பணிப்பாளராக நியமித்தார். ஆனால் 2009ம் ஆண்டு மில்லியன் கணக்கான பவுண்டுகளை சுருட்டிக்கொண்டு றெஜி ஓடியது யாவரும் அறிந்த விடையம். அறியாத விடையங்கள் இதோ…

றெஜி TRO பணிப்பாளராக மாறியதும். கிளிநொச்சியில் அவரது தம்பியான பிரேம ரமணன் TRO ல் வேலை பார்த்த பல இளம் பெண்களை தனது காம இச்சைக்கு பாவித்துள்ளார். இது இவ்வாறு இருக்க ஆண்டுகள் பல கடந்தும் இவர் திருந்திய பாடாக இல்லை. இவரது நண்பர் கட்டாரில் வேலை பார்த்து வரும் நிலையில். அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று மனைவியோடு பழக்கத்தை ஏற்படுத்தி, நண்பனின் மனைவியோடு உறவில் இருந்துள்ளார். இந்த விடையம் கட்டாரில் உள்ள நபருக்கு தெரியவர. அவர் இலங்கை புறப்பட்டு வந்துள்ளார். இன் நிலையில் தான் மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

TRO றெஜியின் சகோதரி ஒருவரும் வன்னியில் வசித்து வருகிறார். அவர் திருமணம் முடித்தது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் முன் நாள் மெய் பாதுகாப்பாளர்களில் ஒருவரை. அவர்கள் வறிய நிலையில் வாழ்ந்து வந்துள்ளார்கள். உண் அண்ணன் மார்கள் எல்லாரும் செல்வச் செழிப்போடு உள்ளார்கள். ஆனால் எங்களுக்கு ஏன் உதவுவது இல்லை ? என்று அவர் பல தடவை தனது மனைவியோடு சண்டையிடுவது வழக்கம். ஒரு நாள் கோபத்தில் மனைவியின் கன்னத்தில் அறையவே. அவர் டொலிபோன் அடித்து இறந்து போன பிரேம ரமணன் மற்றும் அவரது அண்ணா றெஜி(London) ஆகியோருக்கு சொல்ல. இவர்கள் இருவரும் டொலிபோன் எடுத்து உன்னை வெட்டுவேன் குத்துவேன் என்று கரகம் ஆடியுள்ளார்கள்.

பதிலுக்கு தலைவர் பாடி காட் நான், என்னோடு நீங்கள் இப்படி பேசுகிறீர்களா ? என்று கேட்டு இவரும் காணா படியுள்ளார்…. இன் நிலையில் தான் தனது மனைவியோடு கள்ளத் தொடர்பில் இருந்தது போதாது என்று தனக்கே வீடியோவை அனுப்பிய பிரேம ரமணன் மீது கட்டார் நபர் வாள் வெட்டு நடத்தியுள்ளார். இது தெரியாத றெயின் சகோதரி பொலிசாருக்கு தனது கணவரே , தனது தம்மியை வெட்டியதாக வாக்கு மூலம் கொடுக்க. தலைவரின் பாடி காட் தலைமறைவாக .. சீன் 70 MM பயாஸ்கோப் படமாக மாறியது. இதனால் கட்டார் நபர், தான் தப்பியதாக நினைத்துக் கொண்டு மீண்டும் கட்டார் செல்ல முற்பட்டுள்ளார்.

ஆனால் அதற்கு முன்னரே கொழும்பில் உள்ள சி.ஐ.டி யோடு தொடர்புகொண்ட தலைவரின் முன் நாள் பாடி காட், தான் இந்தக் கொலையை செய்யவில்லை என்றும். நண்பனின் மனைவியோடு பிரேம ரமணன் தொடர்பில் இருந்ததால், கணவன் சொல்லி யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற தகவலை அவர் கொடுக்க. கொழும்பில் பொலிசார் உஷாராக, …கட்டநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதாகியுள்ளார் கொலைச் சந்தேக நபர். இது தான் நடந்த உண்மை.

ஆனால் நடந்த விடையம் தெரியாத பல ஊடகங்கள், வேறு வேறு செய்திகளை வெளியிட்டு வருகிறது. தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், வன்னியில் உள்ள பல தமிழர்கள் கட்டாரில் இருந்து வந்து காமக் கொடூரனை கட் பண்ணிய ஆளுக்கு சப்போட்டாக பேசி வருகிறார்களாம்…

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *