ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் 40/1 தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்களை முன்னெடுக்கும் வகையில் 40/1 தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

நோர்வேயில் இருந்து விசேட பிரேரனைகளில் ( A Norwegian-led resolution on environmental human rights defender was adopted by consensus in the UN Human Rights Council ) கலந்துகொள்ள வந்திருந்த N.சேது .

பிரிட்டன், கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்த இந்த தீர்மானத்தை திருத்தங்களின்றி இணை அனுசரணை வழங்க இலங்கை இறுதி நேரத்தில் இணங்கிக்கொண்டது.

இதற்கான தீர்மான முன்வரைவு,  ‘இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில், முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் இருந்து விசேட பிரேரனைகளில் ( A Norwegian-led resolution on environmental human rights defender was adopted by consensus in the UN Human Rights Council ) கலந்துகொள்ள வந்திருந்த N.சேது .

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள சபையின் 43ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில், 2021 மார்ச் மாதம், விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் இருந்து விசேட பிரேரனைகளில் ( A Norwegian-led resolution on environmental human rights defender was adopted by consensus in the UN Human Rights Council ) கலந்துகொள்ள வந்திருந்த N.சேது .

இதற்கமைய, 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விரிவான அறிக்கையுடன், சபையில் விவாதம் ஒன்று நடத்தப்படும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

நோர்வேயில் இருந்து விசேட பிரேரனைகளில் ( A Norwegian-led resolution on environmental human rights defender was adopted by consensus in the UN Human Rights Council ) கலந்துகொள்ள வந்திருந்த N.சேது .

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் இந்த்த் தீர்மானத்தில், 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நோர்வேயில் இருந்து விசேட பிரேரனைகளில் ( A Norwegian-led resolution on environmental human rights defender was adopted by consensus in the UN Human Rights Council ) கலந்துகொள்ள வந்திருந்த N.சேது .

ஜெனிவா நேரப்படி இன்று பிற்பகல் புதிய தீர்மான வரைவு மீது விவாதம் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார்.

அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

13 ஐ நடைமுறைப்படுத்தச் சொல்கிறது இந்தியா

சிறிலங்கா அரசாங்கம் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி ரஜீவ் கே சந்தர்,

‘நெருக்கமான அண்டை நாடான சிறிலங்காவின் நிலைமைகளில் இருந்து இந்தியா விலகியிருக்க முடியாது.

ஒன்றுபட்ட சிறிலங்காவில்  சமத்துவமான, நீதியான, அமைதியான, கௌரவமாக வாழும் வகையில், இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரதும், அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக,  பல இன, பல மொழி, பல சமய, சமூக சிறிலங்காவின் குணவியல்பை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வந்துள்ளது.

சிறிலங்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேற்கொண்ட சாதகமான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்கிறோம்.

சிறிலங்கா அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்துலக  சமூகத்திற்கு வழங்கிய, ஏனைய முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, காலவரம்புக்குட்பட்ட வகையிலான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி,

“சிறிலங்கா உடனடியாக, தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், நிலையான நல்லிணக்க செயல்முறையை நிறுவுவதற்கான நிலையான நடவடிக்கையை, முன்னெடுப்பதற்கு தெளிவான காலவரம்புடன் கூடிய மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்  சிறிலங்காவில் துன்புறுத்தப்படுவது மற்றும் கண்காணிக்கப்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக கிடைக்கும் அறிக்கைகள் கவலை அளிக்கிறது.” என்றும் கூறினார்.

* வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் 
* பொறுப்புக்கூறும் செயல்முறை துரிதப்படுத்தப்பட வேண்டும்
* சர்வதேச நீதிபதிகளையும் உள்வாங்கும் வகையில் 
கலப்புப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்
* ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கிளைக் காரியாலயம் 
இலங்கையில் அமைக்கப்பட வேண்டும்பொறுப்புக்கூறல் பொறிமுறையை செயற்படுத்துவதில் இலங்கை மந்தகதியில் செயற்படுகின்றது எனக் குற்றஞ்சாட்டிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையார், வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையை இன்றைய (20) அமர்வில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,“கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதில் இலங்கை மந்தகதியில் செயற்பட்டு வருகின்றமை வேதனையளிக்கின்றது. எனவே, பொறுப்புக்கூறும் கூறும் செயல்முறை துரிதப்படுத்தப்பட வேண்டும்.குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறப்படும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் தடங்கல் ஏற்படுகின்றது. அரசியல் ரீதியிலான தலையீடுகளும் இடம்பெறுகின்றன.எனவே, உள்ளக நீதிக்கட்டமைப்பின் கீழ் நீதி நிவாரணம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நீதிபதிகளையும் உள்வாங்கும் வகையில் கலப்புப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். இக்கோரிக்கையை இலங்கை நிராகரிக்கின்றமை கவலையளிக்கின்றது.ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க தேசிய காரியாலயம் ஒன்று இலங்கையில் அமைக்கப்படவேண்டும்.பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க நாம் தயார்” – என்றார்.அதேவேளை, மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிர முயற்சி எடுத்துவரும் நிலையில், இது குறித்து ஐ.நா. ஆணையாளர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.“இலங்கையில் தற்போது மரணதண்டனை அமுலில் இல்லை. அது அவ்வாறே நீடிக்கவேண்டும்” – என்றார்.

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பிலான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று வெளியிட்டார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது.
2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று விரிவான அறிக்கையினை சமர்ப்பித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இதன்போது கூறியதாவது,

நீண்ட தாமதத்தை அடுத்து, காணாமற்போனோருக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதையும் நட்டஈடு வழங்குவதற்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதையும் நான் பாராட்டுகின்றேன். அதற்கான ஆணையாளர்கள் குறுகிய காலத்தில் நியமிக்கப்படுவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். கடந்த வருடம் மார்ச் மாதம் ஏற்பட்ட அவசர நிலைமை, ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியலமைப்பு ரீதியிலான பிரச்சினை ஆகியவற்றால் இந்த நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டமை தெரிகிறது. சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பின்புலத்தில், இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரலான, சவேந்திர சில்வா உயர் பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்டமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசேட நீதிக் கட்டமைப்பொன்றை உருவாக்கும் செயற்பாடு மிகவும் மந்தகதியில் உள்ளது. நாட்டில் குற்றங்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படலாம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யும் யோசனை நான்கு வருடங்களாக இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் இதுவரை அந்த விடயம் நிறைவேற்றப்படவில்லை. 40 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் மரண தண்டனையை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.

Update ….

இலங்கை பிர­ஜைகள் அல்­லாத  வெளி­நாட்டு நீதி­ப­தி­களை இலங்­கையின்  வழக்கு செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்த வேண்­டு­மாயின்  அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் செய்­யப்­ப­ட­வேண்டும். அந்த அர­சி­ய­ல­மைப்பு திருத்­த­மா­னது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன்  நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­துடன் அது­தொ­டர்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும்.   அது கடி­ன­மா­னது. எனவே இலங்­கை­யா­னது உள்­ளகப் பொறி­மு­றையில் இந்த செயற்­பாட்டை முன்­னெ­டுப்­ப­தற்கு  சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வேண்டும்  என்று வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்பன தெரி­வித்தார்.  அத்­துடன் இலங்­கையில் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் அலு­வ­லகம் அமைக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மற்­றது என்றே இலங்கை அர­சாங்கம் கரு­து­கின்­றது.  அதனை எந்­த­வி­தத்­திலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நேற்று நடை­பெற்ற   இலங்கை தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு   உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

2017 ஆம் ஆண்­டி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம்  மனித  உரிமை விட­யத்தில் பாரிய முன்­னேற்­றங்­களை வெளிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது.  ஐ.நா. ஆணை­யா­ளரின் அறிக்­கையில் பல்­வேறு விட­யங்கள் தொடர்பில்   வர­வேற்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் நன்றி கூறு­கின்றோம்.  நாம்  பரந்­து­பட்ட ரீதியில் மனித உரிமை பேர­வை­யுடன் ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட விரும்­பு­கின்றோம். நாம் ஏற்­ப­டுத்தும்  முன்­னேற்­றங்கள்   தொடர்பில் இந்தப் பேர­வைக்கு  தெளி­வு­ப­டுத்த விரும்­பு­கின்றோம்.  போருக்குப் பின்­ன­ரான  மீளக்­கட்­டி­யெ­ழுப்­புதல் என்­பது  ஒவ்­வொரு நாட்­டுக்கும் தனித்­து­வ­மா­ன­தாகும்.   நாம் ஏனைய நாடு­க­ளி­ட­மி­ருந்து பாடம் கற்­கலாம். ஆனால்  எமது  உள்­நாட்டு செயற்­பாடே நாம்  நல்­லி­ணக்­கத்­திற்கு  பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

உண்­மையைக் கண்­ட­றியும் செயற்­பாட்டில் நாம் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை நிய­மித்­துள்ளோம். அதன் தொழில்­பா­டுகள் தற்­போது இடம்­பெ­று­கின்­றன. எமது அமைச்­சர்கள்   உண்­மையை  கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை நிய­மிக்க  நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ளோர்   தொடர்பில்  உடன் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.  பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை கொண்டு வர பேச்­சு­வார்த்­தைகள்  இடம்­பெ­று­கின்­றன. இழப்­பீடு வழங்கும் அலு­வ­லகம் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான சட்டம்  பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

மீள்­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் பல வேலைத்­திட்­டங்கள்  முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மிகக்­கு­று­கிய காலத்தில் இந்த சட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி்ன்­றன.  2018 ஆம் ஆண்டு  ஒக்­டோபர் மாதம் இடம்­பெற்ற  அர­சியல் நெருக்­கடி தொடர்பில் ஆணை­யாளர் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார். அந்தப் பிரச்­சி­னையைத் தீர்த்து வைப்­பதில்  இலங்கை உயர் நீதி­மன்றம்  முக்­கிய வகி­பா­கத்தை வகித்­தது. அதன்­மூலம் சுயா­தீன நீதித்­துறை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.  சட்டம் ஒழுங்கு  படைத்­த­ரப்­பினர்   மற்றும்  பொலி­ஸா­ரினால் முன்­னு­தா­ர­ண­மான வகையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  இழப்­பீடு அலு­வ­லகம் நிய­மிக்­கப்­பட்­டுள்ள வகையில் அதற்கு மூன்று ஆணை­யா­ளர்கள்  உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளனர்.    இதற்­காக  500 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை தனது பிர­ஜை­க­ளுக்கு அனைத்து உரி­மை­க­ளையும் உறு­திப்­ப­டுத்­து­கின்­றது.  இந்தப் பேர­வையின் இறுதி யுத்­தத்தின் போது   ஏற்­பட்ட  உயி­ரி­ழப்­புக்கள் தொடர்­பான தவ­றான  புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.   2015 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட ஐ.நா. விசா­ரணை அறிக்­கை­யிலும் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.  மேலும்  அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டுகள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம்  முதல் இது­வரை 63257 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.  அதா­வது 88.87 வீத­மான காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.   இரா­ணுவம் வைத்­தி­ருந்த   தனியார் காணி­களில்  26 ஆயிரம்  ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விட­யத்தில் அர­சாங்கம் முன்­னு­ரிமை வழங்கி செயற்­ப­டு­கின்­றது. மேலும் காணி­களை விரைவில் விடு­விக்க  நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியும் துரித நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கின்றார்.  ஜனா­தி­பதி செய­ல­ணியும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஜனா­தி­பதி செய­ல­ணியில் அனைத்துத் துறைசார் நிபுணர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி இலங்கையில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் அலுவலகம் அமைக்கப்படுவது அவசியமற்றது என்றே இலங்கை அரசாங்கம் கருதுகின்றது.  அதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.  ஐக்கிய நாடுகள்  சபை மற்றும்  மனித உரிமை பேரவையின் நிபுணத்துவ ஒத்துழைப்பை வரவேற்கின்றோம். குறிப்பாக தொழில்நுட்ப உதவிகளை வரவேற்கின்றோம்.  நாம் தொடர்ந்து  ஐ.நா. மனித உரிமை ஆணையாளருடனும் ஐ.நா.மனித உரிமை பொறிமுறையுடனும் இணைந்து செயற்பட  விரும்புகின்றோம்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *