வடமகாணத்தில் 3 இலட்சம் கட்டாகாலியாக திரியும் தெரு நாய்களை மேய்க்க வந்த கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை இலங்கை அரசின் பிரதிநிதியான வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவுத்துள்ளார் என்று ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள், கிசு கிசு வெளியிடும் இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளைப் போன்று இருந்தன என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார் என்று ஆங்கில ஊடகங்களில் செய்திவெளியிடப்பட்டிருந்த்து.

ஜனாதிபதியின் பிரதிநிதிகளில் ஒருவராக ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்ற சுரேன் ராகவன், நாடு திரும்பிய பின்னர், கொழும்பில் நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறினார்.

“ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் வெளி­யிட்ட அறிக்­கை­யில் சில புள்­ளி­வி­வ­ரங்­கள் தவ­றாக இருந்­தன. அந்த புள்ளி விவ­ரங்­கள் கிசுகிசு (கொசிப்) இணை­யத்­த­ளங்­க­ளி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டுள்­ளன. அது தவறு என்று சுட்­டிக்­காட்­டி­னோம். அதே­போன்று திகன வன்­மு­றை­யில் தொடர்­பு­டைய சமூ­கக் குற்­ற­வா­ளி­யின் பெயரை அறிக்­கை­யில் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தார்­கள்.

அத­னை­யும் எதிர்­தி­ருந்­தேன். குற்­ற­வா­ளியை அது பிர­ப­லப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­து­வி­டும்” என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்திருந்தார். வடக்கு மாகாண ஆளுநரின் இந்தக் கருத்தால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.

மிச்சேல் பசெலெட் அம்மையாரை ஆத்திரபட செய்து அவரை தூண்டிவிட்டு இலங்கை முப்படையினரையும் சர்வதேச கூண்டில் நிறுத்தும் வேலையில் சுரேன் ஈடுபட்டுள்ளார். இதைத்தான் சொல்லுவது உள்ளிருந்து கொல்லும் சதி.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *