டாண் உரிமையாளரை கைது செய்ய பணிப்பு!

யாழ்.குடாநாட்டிலிருந்து செயற்பட்டுவரும் டாண் தொலைக்காட்சியின் குகநாதன் என்பவரை கைது செய்ய பருத்தித்துறை நீதிமன்று நெல்லியடி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோதமாக கேபிள் இணைப்புக்களை மின்கம்பங்களில் வழங்கியிருந்த நிலையில் மின் ஒழுக்கு காரணமாக தந்தை மற்றும் மகன் என இருவர் அண்மையில் உயிரிழந்திருந்தனர்.

வடமராட்சி கரவெட்டிப்பகுதியில் அரங்கேறிய இப்படுகொலை தொடர்பில் டாண் தொலைக்காட்சி வெட்டியாடியதையடுத்து உள்ளுர் சேவை வழங்குநர்கள் இருவர் கைதாகயிருந்தனர்.

குறித்த விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ள நிலையில் இன்று டாண் தொலைக்காட்சி பினாமி உரிமையாளரான குகநாதனை கைது செய்ய நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே மீண்டும் குகநாதனை காப்பாற்ற களமிறங்கியுள்ள காவல்துறை அவர் நாட்டிலில்லையென விளக்கமளித்துள்ளதாக தெரியவருகின்றது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *