‘கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு’ – நக்கிற நாய்க்குச் செக்கென்ன, சிவலிங்கம் என்ன?

உதுக்குள்ளை அண்டைக்கு எங்கடை வடமாகாண ஆளுநர் “”கல்லா நிதி”” சுரேன் இராகவன்… மன்னிக்க வேண்டும் எனக்கு அவரைக் கலாநிதி என்று கூப்பிடுகிறது கொஞ்சம் கஸ்டமாகத் தான் இருக்குது.

கலாநிதி என்றால் கொஞ்சமாவது அறிவுபூர்வமாகக் கதைக்க வேண்டும்.

‘கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்ற தெளிவு இருக்க வேண்டும்.

அதை விட்டுப் போட்டு ஒரு கலாநிதி பட்டத்தை பெற்றவுடன் தான் ஏதோ மூலோகங்களையும் அளந்த வாமதேவன் மாதிரி நினைச்சுக் கொண்டு விசர்க் கதையள் கதைக்கக் கூடாது.

நான் சுரேன் இராகவனை கல்லா நிதி என்று சொல்கிறது அவரின்ரை கல்வித் தகமையை வைச்சு இல்லை பாருங்கோ.

தன்ரை சிங்கள எஜமான்கள் கல்லாவில் இருந்து கிள்ளிப் போடுகிற நிதிக்காகத் தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைக்கிற அவரின்னை மானம் கெட்ட பிழைப்பை வைச்சுத் தான் கல்லா நிதி என்று அழைக்கிறேன்.

ஆனாலும் ஆள் அன்றைக்கு நல்லா மூக்குடைபட்டுப் போனார்.

சிறீலங்கா அரசாங்கத்தைக் காட்டமாக விமர்சித்து அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் பல தவறான தகவல்கள் இருப்பதாகவும், கட்டாக்காலி இணையத்தளங்கள் சிலவற்றில் வெளிவந்த தகவல்களை எல்லாம் உண்மை என்று நம்பி அவற்றைத் தன்ரை அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் இணைச்சுப் போட்டார் என்றும் மனுசன் முதலைக் கண்ணீர் வடிச்சிருக்கிறார்.

சரி, எஜமான் போடும் எலும்புத் துண்டை நக்கும் நாய் எப்பவும் எஜமானுக்கு விசுவாசமாகத் தானே குரைக்கும்? அதுக்காக எங்கடை கல்லா நிதி சுரேன் இராகவன் மீது நாங்கள் சிறீப் பாய முடியாது.

ஆனால் அது இல்லை சுவாரசியம் பாருங்கோ.

சிங்கள எஜமான்கள் போட்ட எலும்புத் துண்டுக்காக அவர் முதலைக் கண்ணீர் வடிச்சதோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை பிள்ளையள், ‘சிங்கன் அதோடு நின்று விடாமல் சொன்னார், உண்மை என்ன என்று விசாரிக்காமல் தவறான தகவல்களைத் தன்ரை அறிக்கையில் தான் இணைச்சது பெரிய தவறு என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வருத்தம் தெரிவிச்சவாவாம்.’

உதை கொழும்பில் உள்ள சிங்கள ஊடகங்கள் எல்லாம் ஊதிப் பெருப்பிச்சு தலைப்புச் செய்தியாகப் போட்டுட்டீனம்.

எங்கடை சுரேன் இராகவன் மாத்தையாவும், சிறீசேன கொடுத்த செக்குக்காக (நான் காசோலையைக் குறிப்பிடுகிறன் பிள்ளையள்) தான் விட்ட றீல் நல்லா வேலை செய்திருக்குது என்று நினைச்சிருப்பார்.

உந்த இடத்தில் தான் எங்கடை ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மிசேல் பச்லெற் ஜெரியா உயர்ந்து நிற்கிறார்.

சிலி நாட்டின் அதிபராக இருந்து மனித உரிமைகளுக்காக அயராது உழைத்த எங்கடை ஜெரியா அம்மையார் உடனேயே சீறிப் பாய்ந்து பதில் அறிக்கை விட்டார்.

சிறீலங்கா அரசாங்கத்தின்ரை வடக்கு மாகாண ஆளுநர் தன்னைப் பற்றிச் சொன்னதில் எந்த உண்மையும் இல்லை என்றும், தனது அறிக்கையில் தவறான தகவல்கள் இருந்ததாகத் தான் எந்தச் சந்தர்ப்பதிலும் சொல்லவில்லை என்று மனுசி ஐயம் திரிபு இல்லாமல் சொல்லிப் போட்டார்.

அதோடை எங்கடை ஜெரியா அம்மையார் நிற்கவில்லை. ‘ஒன்றில் சுரேன் இராகவன் சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். அல்லாது போனால் அவர் சொன்னதாகக் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது பொய்யாக இருக்க வேண்டும்’ என்று கல்லா நிதியாரின் மூஞ்சையில் அடிக்கிற மாதிரி மனுசி அறிக்கை வெளியிட்டிட்டுது.

அதுக்குப் பிறகு எங்கடை சுரேன் மாத்தையா கப் சிப் ஆகி விட்டார்.

உதுக்குத் தான் சொல்கிறது. நக்கிற நாய்க்குச் செக்கென்ன, சிவலிங்கம் என்ன? என்று. சிங்கள எஜமான்கள் கொடுக்கிற காசுக்காகக் குரைக்கிறதை விட்டுப் போட்டுத் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கு உந்த சுரேன் இராகவன் மாத்தையா போன்றவர்கள் முன்வர வேண்டும்.

இல்லாவிட்டால் நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர் மாதிரி குப்பைத் தொட்டிக்குள் தான் எங்கடை கல்லா நிதியாரும் போக வேண்டும்.

வரட்டே பிள்ளையள்…?

  • sankathi24 பிலாவடி மூலைப் பெருமான்-

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *