அமெரிக்க முன்னால் முதல் பெண் மிசெல் ஒபாமா நிகழ்வில் நோர்வே சேது

முன்னால் அமெரிக்க முதல் பெண்மணியும் முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி அண்மையில் நோர்வே வந்திருந்தார்.

பல நூறு நோர்வே முக்கியஸ்தர்களும் உலக இராஜதந்திரிகளும் அழைக்கபட்டிருந்தனர். குறித்த நிகழ்வில் இலங்கை சார்பாக என்.சேது கலந்து சிறப்பித்தார்.

மிசெல் லவான் இராபின்சன் ஒபாமா (Michelle LaVaughn Robinson Obama, சனவரி 17, 1964) அமெரிக்க வழக்கறிஞரும் எழுத்தாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் 44வது குடியரசுத் தலைவரும் தற்போது பதவியில் உள்ளவருமான பராக் ஒபாமாவின் மனைவியும் முதல் ஆபிரிக்க-அமெரிக்க முதல் சீமாட்டியும் ஆவார்.

சிகாகோவின் தென்பகுதியில் வளர்ந்த மிசெல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் ஆர்வர்டு சட்டப்பள்ளியிலும் படித்தவர். தனது துவக்க கால சட்டம்சார் பணியை சிட்லி ஆசுட்டீன் என்ற சட்டநிறுவனத்தில் துவங்கினார். இந்த நிறுவனத்தில் பணி புரிகையில்தான் பராக் ஒபாமாவைச் சந்தித்தார்.

பின்னர் சிகாகோ நகரத்தந்தை ரிச்சர்டு எம் டேலியின் அலுவலகத்திலும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்திலும் பணியாற்றியுள்ளார்.

2007 , 2008களில் மிசெல் தனது கணவரின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கானப் பரப்புரையில் துணை நின்றார். 2008, 2012ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாடுகளில் முதன்மை உரையாற்றினார்.

ஒபாமா இணையருக்கு இரு மகள்கள் உள்ளனர். மிசெல் ஒபாமா பெண்களுக்கான வழிகாட்டியாகவும் புதுப்பாங்கு சின்னமாகவும் விளங்குகின்றார். வறுமை உணர்திறன், ஊட்டச்சத்து, உடற்றிறன் பயிற்சிகள், மற்றும் நலவாழ்வு உணவு ஆகியவற்றிற்குப் பரப்புரை ஆற்றி வருகின்றார்.

1989இல் ஒபாமா வேலை பார்த்துக்கொண்டிருந்த சட்ட நிறுவனத்தில் முதலாக தனது மனைவி மிசெல் ராபின்சனை முதலாக சந்தித்து அக்டோபெர் 3, 1992 திருமணம் செய்தனர்.

அவர்களின் முதல் பெண் குழந்தை மலியா 1998இல் பிறந்தார். இரண்டாவது பெண் குழந்தை சாஷா 2001இல் பிறந்தார்[. ஒபாமாவின் விரிவுபட்ட குடும்பத்தில் கென்யர்கள், இந்தோனேசியர்கள், வெள்ளை இன அமெரிக்கர்கள், மற்றும் சீனர்கள் உள்ளனர். தனது தாயாரின் முன்னோர்கள் அமெரிக்க பழங்குடி மக்கள் என்று இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஜிபூட்டியில் அமெரிக்கப் படையினருடன் ஒபாமா கூடைப்பந்தாட்டம் விளையாடுகிறார்.

ஒபாமாவின் நூல்களை விற்று சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி சிக்காகோவின் ஹைட் பார்க் பகுதியிலிருந்து கென்வுட் பகுதியில் ஒரு $1.6 மில்லியன் வீட்டுக்கு நகர்ந்தனர். இந்த வீட்டை வாங்கும்பொழுது அந்த நிலத்தின் ஒரு பகுதியை டோனி ரெஸ்கோ என்பவர் இடம் இருந்து வாங்குதல் பின்பு ஒரு சிறிய சர்ச்சையாக முளைத்தது, ஏனென்றால் இதற்கு பின்பு ரெஸ்கோ அரசியல் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு செய்யப்பட்டார். 2007இல் ஒபாமாவின் வருமானம் $4.2 மில்லியன் மொத்தமானது; இதில் பெரும்பான்மை நூல் விற்பனையிலிருந்து வந்தது[.

உயர்பள்ளியில் கூடைப்பந்தாட்டம் விளையாடியுள்ள ஒபாமா இன்று வரையும் ஓய்வுழையாக விளையாடுகிறார்[. தனது குடியரசுத் தலைவர் பிரச்சாரத்துக்கு முன்பு சிகரெட்டு பிடிப்பதை நிறுத்தியுள்ளார்.

ஒபாமா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தனது தாயார் கிறிஸ்தவராக வளந்தார், தந்தையார் முஸ்லிமாக வளந்தார், ஆனால் திருமணம் செய்வதற்கு முன்பே நாத்திகர்களாக நம்பிக்கை மாற்றியுள்ளனர். இருபது வயதுகளில் இருக்கும் பொழுது ஆபிரிக்க அமெரிக்க தேவாலயங்களுடன் சமூக சேவை செய்து ஆபிரிக்க அமெரிக்க கிறிஸ்தவ மரபின் பெறுமதியை கண்டுப்பிடித்தார் என்று கூறுகிறார்[.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *