பருத்திதுறை நீதவானை கொலை செய்ய யாழ் சிறைக்கு அனுப்பட்ட சயனைட் – வெலிக்கடையில் கொலைக்கு இந்தவாரம் சயனைட்?

வெலிக்கடை சிறைச்சாலையில் சக கைதிகளை கொலை செய்ய சயனைட்களை மறைத்து வைத்திருந்த கைதியொருவர் அகப்பட்டுள்ளார். 2015ம் ஆண்டு வல்லை இராணுவ முகாமருகில் அம்புஸ் முறையில் கைது செய்யபட்ட நோர்வே சேதுவை யாழ் சிறைக்குள் வைத்து கொலை செய்துவிட்டு நோர்வே சேது சிறைக்குள் தற்கொலை செய்துவிட்டதாக செய்தி போடுவதற்காக சாவகச்சேரி பகுதியில் வசித்துவரும் சலரோக சர்வா எனப்படும் குமாரு சர்வாணந்தன் என்பவர் இலங்கை இராணுவ உளவுத்துறையினரின் உதவியுடன் கோக்ககோலா போத்தலுக்குள் ஒரு சயனைட்டை கலந்துவிட்டு மேலும் ஒரு வடிசாராயத்திற்குள் 03 சயனைட்டுகளை உடைத்து கலந்துவிட்டு கைது செய்யபட்டு தடுத்து வைக்கபட்டிருந்த நோர்வே சேதுவுக்கு சிறைக்குள் கொண்டு வந்து கொடுத்திருந்தார்.

குறித்த புத்தம் புதிய கோலா பானத்திலும் புத்தம் புதிய வடிசாராயத்திலும் பலத்த சந்தேகம் கொண்ட நோர்வே சேது குறித்த இரண்டு போத்தில்களையும் உடைத்து சில பல ஆய்வகளை செய்து பார்த்தபோது அவற்றுக்குள் நஞ்சு கலந்திருந்தமை உறுதிபடுத்தபட்டிருந்தது.

உடனடியாகவே அவற்றை மலசலகூடத்திற்குள் உற்றி இருந்தார். குமாரு சர்வாணந்தனுடன் தமிழ் போண்று கூடவே வந்திருந்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் இந்த சதியை அரங்கேற்றி இருந்தார்.

குமாரு சர்வாணந்தன் பருத்தித்துறை நீதவானை சட்ட சிக்கலில் மாட்டும் நோக்குடன் பருத்திதுறை நீதிமண்றத்தால் தடை உத்தரவு போட்ட நோர்வே சேதுவுக்கு நஞ்சு கலந்த கோலா கொண்டு சென்று கொடுத்திருந்தார்.

தடுத்து வைக்கபட்டுள்ள நோர்வே சேது தனது கோலாவை குடித்து சிறைக்குள் இறந்துவிடுவார் எனவும் அதன்பின்னர் நோர்வே சேது சிறைக்குள் தற்கொலை செய்துவிட்டதாகவும் இலங்கை உளவுத்துறையினர் செய்தி போட ஏற்பாடுகளை செய்து வந்திருந்தனர்.

இந்த விடயத்தினை நேர்வே சேது இலங்கை போலிஸ் மா அதிபருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் அறிவித்திருந்தும் இண்றுவரை குறித்த விடையம் இருட்டடிப்பு செய்யபட்டு மறைக்கபட்டு வரகிறது.

இத்தகய சதி ஒண்று இந்தவாரம் தென்இலங்கை சிறையிலும் அரங்கேறி உள்ளது.

சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதியொருவரிடமிருந்துஇ சயனைட் குப்பிகள் இரண்டும் மருந்து ஏற்றப்பட்ட ஊசிகள் இரண்டும், புலனாய்வுத் துறை அதிகாரிகளலால் கைப்பற்றப்பட்டுள்ளன என, இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

சிறைச்சாலை தேடுதலில்இ சயனைட் அடங்கிய சயனைட் குப்பிகள் இரண்டுஇ மருந்து ஏற்றப்பட்ட ஊசிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன.

அதனை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில், கைதியொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்குள் இருந்து செயற்படும் குழுவின் உறுப்பினர்களில் இருவரை படுகொலை செய்யும் நோக்கிலேயேஇ இந்த பொருள்கள் தருவிக்கப்பட்டதாக, விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சயனைட் அடங்கிய குப்பிகள் இரண்டும் மருந்து ஏற்றப்பட்ட ஊசிகள் இரண்டும், மேலதிக விசாரணைகளுக்காக, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *