யாழ் மண்கும்பான் ISIS பள்ளிவாசலில் தோட்டாக்கள் மீட்கப்பட்டன!!

யாழ்.தீவகம் – மண்கும்பான் பள்ளிவாசலில் இன்று காலை சிறப்பு
அதிரடிப்படையினா், இராணுவம் மற்றும் பொலிஸாா் இணைந்து நடாத்திய சோதனையில்இராணுவம் பயன்படுத்தும் சில பொருள்கள் மீட்கப்பட்டதாகப் பொலிஸாா் தொிவித்தனா்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்
அடிப்படையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்த பொலிஸாா் மற்றும் விசேட
அதிரடிப்படையினா்,  அங்கு சோதனையிட்டபோது இராணுவம் பயன்படுத்தும் உடல்
கவசம், கொமாண்டோ படைப்பிாிவினா் பயன்படுத்தும் நீா் பை, ரி-56
துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 2 மற்றும் பட்டாசுகள் ஆகியன
மீட்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து இடம்பெற்ற விசாரணைகளின்
அடிப்படையில் அங்கு உள்ள ஒருவா் சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *