‘யாழ்ப்பாணத்தில் 200 மாதிரிக் கிராமங்கள்’

நாட்டில் ‘யாவருக்கும் புகலிடம்’ என்ற கொள்கையின் கீழ், 2025ஆம் ஆண்டாகும் போது, 20,000 மாதிரிக் கிராமங்களை அமைத்து, அனைவருக்கும் வீடுகள் என்பதை நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இவ்வாண்டு இறுதிக்குள், 200 மாதிரிக் கிராமங்களை யாழ்ப்பாணத்தில் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

வீடமைப்பு அமைச்சின் “செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்தின் கீழ், தேசிய வீடமைப்பு அதிகாரசபையால், யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட “நாவலர் கோட்டம்” எனும் மாதிரிக் கிராமத்தைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (07) நடைபெற்ற போதே, அமைச்சர் இவ்வாறு இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், “இந்த ஆட்சிக் காலத்தில், ஜனாதிபதியாலும் பிரதமராலும், எனக்குப் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2019ஆம் ஆண்டு இறுதி நாளில், 2,500ஆவது மாதிரிக் கிராமம் ஆரம்பிக்கப்படும். இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு, 2025 ஆம் ஆண்டளவில், 20,000 மாதிரிக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு, அனைவருக்கும் வீடு என்பது நடமுறைப்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, யாழ்ப்பாணம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், “யாழ்ப்பாண மாவட்டத்தில், 68 மாதிரிக் கிராமங்களை அமைத்துள்ளார்கள். ஆனால், அதில் எனக்குத் திருப்தியில்லை. தற்போது, எமது அதிகாரசபையின் யாழ்ப்பாண முகாமையாளருக்கு, இலக்கொன்றை வழங்கியுள்ளேன். அதாவது, அடுத்த மூன்று மாத காலத்துக்குள், இங்கு 200 மாதிரிக் கிராமங்களை அமைக்க வேண்டும் என்பதாகும்” என்று குறிப்பிட்டார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *