ரிசாட்டின் வாகனத்தில் ISIS தற்கொலைதாரி!! சிக்கின புதிய ஆதாரங்கள்..

நாட்டில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கைது செய்து விசாரணை ஆரம்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தற்கொலைதாரி இப்ராஹிம் இன்சாட் வர்த்தக வாணிப அமைச்சின் வாகனத்தையும், அமைச்சினது பெயர்ப் பலகையினையும் காட்சிப்படுத்தியவாறு எமது பிரதேசத்தில் உலாவியிருக்கின்றார்.

கண்டி, தெல்தோட்ட பகுதியில் அமைச்சின் வாகனங்களில் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். அதற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன.

இந்த இப்ராஹிம் இன்சாட்டின் வங்கி கணக்கினை பரிசோதித்து பார்த்தால் அனைத்து உண்மைகளும் வெளியே வந்து விடும்.

இப்ராஹிம் இன்சாட்டுக்கு வந்த பணம் மற்றும் காசோலைகளின் பணம் தொடர்பில் தெரிய வந்துவிடும்.

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரனின் காசோலை விபரமும் தெரியவந்து விடும். இவர்களுக்கு இடையில் இருக்கும் தொடர்பு என்ன என்பதை பொலிஸ் குற்றவியல் திணைக்களம் தெரிந்து கொள்ள முடியும்.

துருக்கி நாட்டின் பலர் இலங்கைக்குள் வந்து வியாபார நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளார்கள் என துருக்கி உயர்ஸ்தானிகர் எமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

அவர்களின் வியாபாரங்களை தடை செய்யுங்கள் என்று அவர்களின் பெயர் விபரங்களையும் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது முடிவுகள் வந்தன. அந்த நிறுவனங்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீனால் கொண்டு வரப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவரே பொறுப்பாளியாக இருக்கின்றார். அவர்களை அவரே பாதுகாக்கின்றார் என்று தான் பாதுகாப்பு அமைச்சின் பதில் வந்தது.

இந்த அடிப்படைவாத குழுக்களின் பின்னால் இருப்பவர் யார் என்றால் இங்கு இருக்கின்ற மிகச் சக்தி வாய்ந்த நபர் அமைச்சர் ரிசாட் பதியுதீன். அவர் இவ்வாறானவர்களை பாதுகாக்கின்றார்.

பயங்கரவாதம் செய்கின்றவர்களை பாதுகாத்து வருகின்றார். அடிப்படைவாதிகளை காப்பாற்றி வருகின்றார். அவர்களை கைது செய்யாது பாதுகாத்து வருகின்றார்.

அவர்கள் தொடர்பிலான தகவல்களை மறைத்து அவர்களுக்கு உதவி வழங்குகிறார். அவர்களுடன் இணைந்து வியாபார நடவடிக்கையிலும் ஈடுபடுகிறார்.

நான் இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திடமும், புதிய பொலிஸ் மா அதிபரிடமும், புதிய பாதுகாப்பு செயலாளரிடமும் கோரிக்கை வைக்கின்றேன்.

உடனடியாக இந்த அடிப்படை மதவாத குழுக்களின் பின்னணியில் பிரதானியாக இருக்கின்ற ரிசாட் பதியுதீனை கைது செய்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *