காட்டிக் கொடுத்தவரை கொலை செய்த இலங்கை ISIS தீவிரவாதிகள்!!

ISIS செயற்பாடுகள் குறித்து சிறிலங்கா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இவ்வாறு குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொஹமட் ஹாதில் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் பிரதேசத்தில் வடை விற்பனை செய்து வந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த இந்த நபர் வத்துப்பிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் முஸ்லிம் அடிப்படைவாத நடவடிக்கைகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி வந்துள்ளார்.

இதனால், அடிப்படைவாதிகள் இந்த நபரை கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பாக நிட்டம்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் உள்ளிட்ட 38 பேர் குறித்த இடத்தில் பயிற்சி பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அம்பாறை, சாய்ந்தமருது பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த முகாம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக் பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில், கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் சஹ்ரான் உள்ளிட்ட 38 தீவிரவாதிகள் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் நுவரெலிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

T56 ரக துப்பாக்கியை மீள் பொருத்தும் பயிற்சி மற்றும் கடந்த 21 ஆம் திகதிக்கு முன்னராக ஏப்ரல் 17 ஆம் திகதியன்று, தாக்குதலுகான இறுதி பயிற்சி சஹாரான் தலைமையில் இந்த கட்டிடத்திலே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால குத்தகை அடிப்படையிலே குறித்த இரண்டு மாடி கட்டிடத்தை இந்த தீவிரவாதிகள் குத்கைக்கு பெற்றுள்னர் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சுற்றிவைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட பணியாளர் ஒருரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்த நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவித்த நுவரெலியா பொலிஸார், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *