பாடசாலைகளின் நிலமைகளை ஆராய்ந்தார் பிரதிப் பொலிஸ் மா அதிபர்!!

யாழ்ப்­பாண நக­ரத்­துக்­குட்­பட்ட பிர­பல பாட­சா­லை­க­ளுக்கு வடக்கு மாகாண பிர­திப் பொலிஸ் மா அதி­பர், யாழ்ப்­பாண மாவட்ட பிர­திப் பொலிஸ் மா அதி­பர் ஆகி­யோர் நேற்று திடீர்ப் பய­ணம் ஒன்றை மேற்­கொண்­ட­னர்.

யாழ்ப்­பா­ணம், சுண்­டுக்­குழி, சென்­ஜோன்ஸ், பக்­ரிஸ், கொன்­மென்ட், ஆகிய பாட­சா­லைக்கே வடக்கு மாகாண பிர­திப் பொலிஸ் மா அதி­பர் றொசான் பெர்­னாண்டோ, யாழ்ப்­பாண மாவட்ட பிர­திப் பொலிஸ் மா அதி­பர் ராஜித சிறி­த­மிந்த ஆகி­யோர் நேற்று நேரில் சென்­ற­னர்.

பாட­சா­லை­க­ளின் பாது­காப்பு, மாண­வர்­கள் வர­வில் உள்ள சிக்­கல் போன்ற விடை­யங்­களை பாட­சா­லை­க­ளின் அதி­பர், ஆசி­ரி­யர்­க­ளி­டம் கலந்­து­ரை­யாடி அவர்­கள் ஆராய்ந்­தார்­கள். தற்­கொ­லைக் குண்­டுத் தாக்­கு­தல்­கள் இடம் பெற்­றத்­தைத் தொடர்ந்து நாட்­டில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண சூழல் கார­ண­மாக பாட­சா­லை­க­ளின் இரண்­டாம் தவ­ணைக்­கான ஆரம்­பம் பிற்­போ­டப்­பட்­டது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *