யாழில் 14 “ISIS மூளைச்சலவை முகாம்களில்” திடீர் சோதனை

யாழ்.நகாில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் “ISIS மூளைச்சலவை முகாம்களில்” ஒரு நேரத்தில் சுற்றிவளைக்கப்பட்டு பாாிய தேடுதல் வேட்டை நடாத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களினால் நாடு முழுவதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பாடசாலைகளும் மீண்டும் வழமைபோல இயங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் நாட்டில் மீண்டும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறலாம் என்ற அச்சநிலை காணப்பட்டு வருகின்றது.

அண்மையில் கூட யாழ்ப்பாணம் சுண்டுக்குழி மகளீர் கல்லூரிக்கு தீவிரவாத இயக்கத்தின் பெயரில் துண்டு பிரசுரம் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட்து.

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள்,முக்கிய இடங்கள் பாதுகாப்பு தரப்பினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அத்துடன் நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு தரப்பினரின் தேடுதல் நடவடிக்கைகளின் போது ஆங்காங்கே வெடி பொருட்கள் மற்றும் மர்ம பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று யாழ் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் ஒரே நேரத்தில் சோதனையிடப்பட்டது.

எனினும் அங்கிருந்து எவ்வித பொருட்களுமோ சந்தேக நபர்களோ கைது செய்யப்படவில்லை. இலங்கை இராணுவத்தினர்,

பொலிஸார்,விஷேட அதிரடிப்படையினர் ஆகியயோர் இன்று காலை 10 மணியில் இருந்து 1 மணி வரை பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்ட்து.இந்த தேடுதல் வேடடையில் தேசிய ஜவுகீத் தமா அத் அமைப்பினரின் “ISIS மூளைச்சலவை முகாம்களில்” பாதுகாப்பு தரப்பினரால் சோதனையிடப்பட்ட்து.

சொப்பின் பையுடன் கொழும்பு வந்த றிசாட் ஆசிய பணக்காரரானது எப்படி ?

சொப்பின் பை ஒன்றில் உடைகளுடன் கொழும்புக்கு வந்த அமைச்சா் றிஷாட் பதியூதீன் ஆசியாவில் மிகப்பொிய பணக்காரா் ஆனது எப்படி? இது தொடா்பில் அரசாங்கம் விசாாிக்காமல் இருப்பது ஏன்? என பொதுபலசேனா அமைப்பின் தேசிய அமைப்பாளா் நந்தன தேரா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆஜராகுவதற்காக சென்ற போது ஊடகவியலாளர்களிடம் தேசிய அமைப்பாளர் நந்தன தேரர் மேற்படி கேள்விகளை எழுப்பியுள்ளாா்.

தனது அமைச்சு பதவியை தவறாக பயன்படுத்தி பாரிய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பயங்கரவாத குழுக்களுக்கு பாதுகாப்பு வழங்கி பாரிய சொத்துக்களை பெற்றுள்ளதாக தேரர் குற்றம் சாட்டினார்.

சாதாரண சொப்பின் பை ஒன்றில் ஆடை எடுத்து கொண்டு கொழும்பு வந்த ரிசாத் பதியூதின், மிகப் பெரிய பணக்காரனாக மாறியது எப்படி?

இது தொடர்பில் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என தேரர் குறிப்பிட்டார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *