அரச பயங்கரவாதம்

அரச பயங்கரவாதம்(State terrorism) எனும் சொல் ஒரு அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும். ஒரு அரசு கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை அரச சட்டத் திட்டங்களையும் உலக பொது மனித உரிமை சட்டத்திட்டங்களையும் மதிக்கத் தவறி அல்லது புறந்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் அரசப் பயங்கரவாதம் எனப்படும்.

பயங்கரவாதம் (Terrorism) என்பது ஒரு மரபுசாராப் போர்முறையும்உளவியற் போர்முறையும் ஆகும். இச்சொல் அரசியலோடும் உணர்வுகளோடும் தொடர்புபட்டிருப்பதால் இதனைச் சரியாக வரையறுப்பது கடினமானது. 1988 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை நடத்திய ஓர் ஆய்வின்படி பயங்கரவாதத்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஒருவர் “பயங்கரவாதி” எனப்படுவார். 

பயங்கரவாதத்தைப் பல வகையான அரசியல் இயக்கங்கள் தமது நோக்கங்களை அடைவதற்காகப் பயன்படுத்துகின்றன. இவற்றுள் இடதுசாரிவலதுசாரி இயக்கங்கள், மதக் குழுக்கள், புரட்சியாளர்கள், ஆளும் அரசுகள் போன்ற பலவும் அடங்கும். அரசு அல்லாத குழுக்கள் பரவலான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பது போர்ச் சட்டங்களைப் பயன்படுத்துவதில் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *