கிளிநொச்சி நீதிபதி கணேசராஜா திடீர் இடமாற்றம்

கிளிநொச்சி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, மன்னார் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா இருவருக்கும் இடமாற்றம் வழங்கி நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பணித்துள்ளார்.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, மன்னார் மாவட்ட நீதிபதியாக வரும் 3ஆம் திகதி திங்கட்கிழமை பொறுப்பேற்கவேண்டும் என்றும் மன்னார் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாக அன்றைய தினம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.

 இந்த இடமாற்ற அறிவிப்பை நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இன்று வியாழக்கிழமை மாலை விடுத்தார்.

கிளிநொச்சி மாவட்ட நீதிபதியும் நீதிவானுமான மாணிக்கவாசகர் கணேசராஜா, கடந்த ஆண்டு மே ஜூன் மாதம் மட்டக்களப்பிலிருந்து கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டார். அவர் வடக்கு மாகாணத்தில் இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி, பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றியிருந்தார்.

 மன்னார் மாவட்ட நீதிபதியும் நீதிவானுமான ரி.சரவணராஜா கடந்த ஆண்டு இடமாற்றம் பெற்று வந்தார். மன்னார் மனிதப் புதைகுழி வழக்குகளை நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற்று முன்னெடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *