கஜகஸ்தான் முன்னால் பிரதமந்திரி யாழ் சேது மத்திய ஆசிய விவகாரம் தொடர்பாக கலந்துரையாடல்

கஜகஸ்தான் முன்னால் பிரதம மந்திரிக்கும் யாழ் சேதுக்கிடையிலான நண்புறவான சந்திப்பு அண்மையில் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது. சமூக வலைத்தளம் ஊடாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சீனாவின் நகர்வுகள் அதன் ஆபத்துகள் சர்வதேச பார்வையில் கஜகஸ்தான் நடக்கப்போகும் துன்பங்கள் என்பன கலந்துரையாடபட்டது.

கசக்கஸ்தான் அதிகாரபூர்வமாக கசக்கஸ்தான் குடியரசு, என்பது நடு ஆசியாவிலுள்ள ஒரு கண்டம் கடந்த தொடர்ச்சியான நாடாகும். இதன் ஒரு சிறுபகுதி கிழக்கு ஐரோப்பாவில் யூரல் ஆற்றுக்கு மேற்கே அமைந்துள்ளது. கசக்கஸ்தான் உலகின் மிகப்பெரிய நிலம்சூழ் நாடாகவும் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாகவும் உள்ளது. 2,727,300 சதுர கிலோமீட்டர்கள் (1,053,000 sq mi) பரப்பளவு கொண்ட இதன் பகுதி மேற்கு ஐரோப்பாவிலும் பெரியதாகும். இதன் எல்லைகளாக (வடக்கிலிருந்து வலஞ்சுழியாக) ரசியா, சீனா, கிர்கிஸ்தான், உசுபெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் கஸ்பியன் கடலின் பெரும்பகுதியும் காணப்படுகின்றன.

கசக்கஸ்தானின் நிலவமைப்பு வெட்டவெளிகள், புல்வெளிகள், தைக்கா காடுகள், மலைப் பள்ளத்தாக்குகள், மலைகள், கழிமுகங்கள், பனிச்சிகரங்கள் மற்றும் பாலைவனங்களைக் கொண்டுள்ளது.இதன் மக்கள்தொகை (2013 கணிப்பீடு) 17 மில்லியனாகும். மக்கள்தொகை அடிப்படையில் கசக்கஸ்தான் 62ம் இடத்திலுள்ளது. எனினும் இதன் மக்கள்தொகை அடர்த்தி சதுரக்கிலோமீற்றருக்கு 6 பேருக்கும் குறைவாகும். (சதுர மைலுக்கு 15 பேர்). 1997ல் இதன் தலைநகர் அல்மாடியிலிருந்து அஸ்தானாவுக்கு மாற்றப்பட்டது.

கசக்கஸ்தானின் பகுதிகளில் வரலாற்றுக்காலம் முதல் நாடோடிக் குழுக்கள் குடியேறியுள்ளனர். 13ம் நூற்றாண்டில் செங்கிஸ் கான் நாட்டைக் கைப்பற்றிய பின் இது மாற்றமுற்றது. எனினும் அவனது குடும்பத்தினரின் அதிகாரப் போட்டி காரணமாகக் கசக்கஸ்தானின் ஆட்சி நாடோடிக் குழுக்களிடம் கைமாறியது. 16ம் நூற்றாண்டில் கசாக்குகள் ஒரு தனித்துவமான குழுவாக எழுச்சி பெற்றதுடன் மூன்று கோத்திரங்களாகவும் பிளவுற்றனர்.18ம் நூற்றாண்டளவில் ரசியர்கள் கசாக்கு ஸ்டெப்பீ புல்வெளிகள் நோக்கி முன்னேறியதுடன் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கசக்கஸ்தானின் சகல பகுதிகளும் ரசியப் பேரரசின் ஒரு பகுதியாகியது. 1917ன் ரசியப் புரட்சியின் பின்பும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போரைத் தொடர்ந்தும், கசக்கஸ்தானின் பகுதிகள் மீளமைக்கப்பட்டு 1936ல், கசாக்கு சோவியத் சமவுடமைக் குடியரசு எனும் பெயரில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியானது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *