நோர்வே நாட்டவர் யாழில் கோரமான முறையில் கொலை ?

நோர்வே நாட்டிலிருந்து வந்து யாழில் தனது வீட்டைக் கட்டிக்கொண்டிருந்த ஜீவகுமார் சந்தேகத்திற்கு இடமான முறையில் கொல்லபட்டுள்ளார். அவருடைய பிடரி பக்கமும் தலையின் முன்பக்கமும் காயங்கள் உள்ளதாக அறிய முடிகிறது.

ஜீவகுமார் நோர்வே தலைநகரம் ஒஸ்லோவில் 04 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர்.

மிகவும் மண்பற்றுடைய ஜீவகுமாரின் நோர்வே நாட்டுத் தொலைப்பேசியிலிருந்து நோர்வேவில் வாழ்ந்துவரும் யாழ் சேதுவுக்குப் பல தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளது.

நோர்வேவில் வாழ்ந்துவரும் யாழ் சேது தொலைப்பேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று அறிய முடிகிறது.

குறித்த தொலைப்பேசிக்கு தொலைபேசி எடுத்தபோது ஜீவகுமார் இறந்துவிட்டதாக குறித்த தொலைபேசியை வைத்திருந்தவர்கள் தெரிவித்ததாக அறிய முடிகிறது.

நோர்வே நாட்டில் பல்வேறு விடயங்களில் குரல் கொடுத்து வந்த ஜீவகுமார் ஆலயங்களில் நடக்கும் அருவருப்பான விடயங்களை அம்பலபடுத்தி வந்தவர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *