மாசிடோனியா பாதுகாப்பு அமைச்சர் யாழ் சேது இரகசிய சந்திப்பு

மாசிடோனியா பாதுகாப்பு அமைச்சர் யாழ் சேது இரகசிய சந்திப்பு .

மாக்கடோனியக் குடியரசு, பொதுவாக மாக்கடோனியா என அழைக்கப்படும் ஒரு குடியரசு நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் உள்ள நாடு. இதன் எல்லைகளாக வடக்கே செர்பியா, மேற்கே அல்பேனியா, தெற்கே கிரேக்கம், கிழக்கே பல்கேரியாவும் அமைந்துள்ளன. ஐநா அவையில் இது 1993இல் இணைந்தது.

இதன் தலைநகரம் ஸ்கோப்ஜி ஆகும். இதில் 500,000 பேர் வசிக்கிறார்கள். மாக்கடோனியாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆறுகளும் குளங்களும் உள்ளன. 2,000 மீட்டருக்கும் அதிகமான உயரமான 16 மலைகள் உள்ளன.

1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது முதல், மாசிடோனியா பெயர் தொடர்பான பிணக்கு, கிரீஸ் நாட்டுடன் இருந்து வருகிறது.

பேரரசர் அலெக்சாந்தர் ஆண்ட, கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதி மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா நாடு உரிமை கோரலாம் என நினைத்து, நீண்ட காலமாக கிரீஸ், மாசிடோனியா நாட்டுடன் பிணக்கு கொண்டிருந்தது. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.

30 வருட சர்ச்சைக்கு பிறகு, கிரீசின் அண்டை நாடான மாசிடோனியா, வடக்கு மாசிடோனியா என பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் சூன், 2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேரும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *