யாழ்.நாவாந்துறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி முஸ்லிம் ISIS பெயரில் கொள்வனவு?

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வீதியில், நாவாந்துறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியை முஸ்லிம் தனி நபர் ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்தமைக்கு அரச நிதியைப் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என நாவாந்துறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். மாநகர சபை குப்பைகளைக் கொட்டிவந்த நூறு பரப்பிற்கு மேற்பட்ட காணி முஸ்லிம் மக்களின் குடியேற்றத்திற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டிலேயே இக்காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

காணிகளைக் கொள்வனவு செய்வதற்கு அரச நிதியைப் பயன்படுத்த முடியாது என்ற கட்டுப்பாடு இருக்கும்போது ரிஷாட் எப்படி இந்தக் காணிக்கு அரச நிதியை ஒதுக்கினார் என்பது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வீதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி ஒன்றை யாருக்கும் தெரியாமல் பரம இரகசியமாக முஸ்லிம் தலைமை கொள்வனவு செய்துள்ளது. இதன் கொள்வனவுக்கு கோடிக்கணக்கான ரூபா பணம் செலவிடப்பட்டது எனக் கூறப்படுகின்றது.

குறித்த காணி விற்பனைக்கு உள்ளது என்பதை அறிந்த யாழ். மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர் மு.ஆ நியாஸ் மற்றும் அவரோடு இணைந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த விடயத்தை அப்போதைய அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவந்து அதைக் கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்தனர்.

இந்த நிதி எவ்வாறு பெறப்பட்டது என்பது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படவேண்டும். யாழ்ப்பாணத்தில் பல ஏக்கர் கணக்கான காணியை தனி நபரின் பெயரில் கொள்வனவு செய்வதற்கு ரிஷாட் பதியுதீன் எந்த அடிப்படையில் அரச நிதியைப் பயன்படுத்தினார் என அவரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

1 Comment

  1. உயிர்த்த ஞாயிறுக்கு பின் பல முஸ்லீம் கேடிகளின் நிஜமான முகங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது தற்போதைய அரசியல் செயற்பாடுகள்! உண்மையில் இலங்கை புலனாய்வுப் பிரிவிற்கு பாராட்டுக்கள் சொல்லியாகவேண்டும் நன்றியுணர்வுடன். இன்னும் பல போலி அரசியல் விபச்சாரிகள் சமுகத்தில் தோலுரித்துக்காட்டப்படவேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *