அற்புதத் தீவாக மாறவுள்ள யாழ்ப்பாணத்தின் ஓர் பகுதி!

யாழ்ப்பாணத்தின் முக்கிய தீவுகளில் ஒன்றான மண்டைதீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வலையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி மண்டைதீவின் அழகிய கடற்கரையோரத்தை அபிவிருத்திக்குள்ளாக்கி அதன்மூலம் படகுச் சவாரி போன்றவற்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக உள்ளூர் சுற்றுலாதாரிகளை குறித்த பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாதாரிகளும் குறித்த இடத்திற்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இதன்மூலம் ஆழம் குறைந்த அகன்ற யாழ்ப்பாணக் கடநீரேரியிலுள்ள பவளப் பாறைகள், கடற் தாவரங்கள் மற்றும் மீனினங்கள் போன்றவற்றையும் குடாநாட்டின் கரையோர வனப்பையும் கண்டு ரசிக்கமுடியும் என சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *