யாழ்ப்பாணம்- கொழும்பு பேருந்து சாரதியை கடத்திச் சென்று கப்பம்

யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பேருந்து ஒன்றின் சாரதியை கடத்திச் சென்று கப்பம் கோரிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா்.

கைதானவர்களிடம் இருந்து கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 2 முச்சக்கர வண்டிகள், கையடக்க தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள் கொழும்பு 12 மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள என காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *