யாழல் ஹெரோயின் வியாபாரம் செய்த இராணுவ சிப்பாய் கைது ?

யாழ்.குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உள்பட 5 பேர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் உள்பட 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.   
அவர்களில் ஒருவர் பலாலி உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் இராணுவத்தில் சேவையாற்றும் தமிழ் உத்தியோகத்தர் என விசாரணைகளில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் ஐவரும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *