
ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சுப் பதவிக்காக மண்டியிடப் போவதில்லையென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மாவனல்லை பிரதேசத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பீலட் மார்சல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;
தற்போது எனக்கு அமைச்சுப் பதவியொன்று வெண்டுமெனின் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேளுங்கள் எனத் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி மைத்திரி நான் அவர் முன்னிலையில் அமைச்சுப் பதவிக்காக மண்டியிடுவேன் என நினைத்திருந்தால் நான் மன்னிப்பு கோர உங்களிடம் வர மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
நான் கொலை செய்ய திட்டமிட்ட ஒரேயொரு நபரெனின் அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தாலைவர் பிரபாகரன் ஆவார்.
அதனை நான் வெளிப்படையாக பிரசித்தமாக செய்தேன். பிரபாகரனும் இறுதி கட்டம் வரை போராடியதால் அவர் மீது ஒரு மரியாதையுள்ளது.